Realme X2 Pro நேற்று சீனாவில் அறிமுகமானது. இது நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 855 உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.
13 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவைகள் உள்ளது.
4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.