சீன நிறுவனமான ரியல்மி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது விரைவில் அறிமுகமாகவுள்ள Realme X2 Pro பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது 50W SuperVOOC Flash சார்ஜ் கொண்டு வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் SoC போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
டூல்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வரவுள்ளது, அதில் ஹை-ரெஸ் ஒலி தரம் கிடைக்கும்.
இது முதன்மையான குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC கொண்டு வெளியாகக் கூடியதாக உள்ளது.
இது குவாட் ரியர் கேமரா அமைப்பு, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 20x ஹைப்ரிட் ஜூம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் 3,700mAh பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்யக் கூடியதாக உள்ளது.