சியோமி நிறுவனத்தின் Realme X2 Pro கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Realme X2 Pro நாளை மறுநாள் இந்தியாவில் அறிமுகமாகும் நிலையில், இன்று ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனையினைத் துவக்கியுள்ளது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி, நவம்பர் 27 இரவு 11:59 மணி வரை நடைபெறும்.
இந்த விற்பனையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதாவது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா ஈ.எம்.ஐ வசதி மற்றும் ரூ. 11,500 மதிப்புள்ள ஜியோ பெனிஃபிட்ஸ் போன்றவையும் இதில் கிடைக்கும்.
இந்த ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 வகைகளில் வெளியானது.
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 27,600
- 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 29,999
- 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 33,999

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 855 உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.
13 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவைகள் உள்ளது.
4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.