Mobile

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!

Realme X2 Pro நாளை மறுநாள் இந்தியாவில் அறிமுகமாகும் நிலையில், இன்று ரியல்மி வலைதளம் மூலம் விற்பனையினைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் Realme X2 Pro ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

Realme X2 Pro நேற்று சீனாவில் அறிமுகமானது. இது  நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 வகைகளில் வெளியாகிறது.

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!
  1. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 27,600
  2. 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 29,600
  3. 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ. 33,700

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 855 உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.

கேமரா:

 இந்த ஸ்மார்ட்போனில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.

 13 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவைகள் உள்ளது.

4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.

Related posts

1000 ரூபாய் விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

TechNews Tamil

1000 தள்ளுபடி அறிவித்த Oppo A9 2020!

TechNews Tamil

ஐபோன் 12 இல் யாரும் எதிர்பார்க்காத அசத்தலான அம்சம்!!!

TechNews Tamil