சீனாவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது டிஜிட்டல் கட்டண சேவியில் களம் இறங்க உள்ளது.
அதாவது இக்காலத்தில் மொபைல் போன் ரீசார்ஜ் முதல் மின்சார பில், வாட்டர் பில், ஆன்லைன் ஷாப்பிங்க், ஆப்லைன் ஷாப்பிங்க் என அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையே பயன்பாட்டில் உள்ளது.
மேலும் இது மிகவும் எளிதான முறையாக இருப்பதால், டிஜிட்டலுக்கு அப்பாற்பட்ட பயனர்களும் இதன் அவசியம் மற்றும் எளிமைத் தன்மை காரணமாக இதனைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி Realme PaySa என்ற சேவையினை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள Google Pay, Paytm, போன்ற டிஜிட்டல் கட்டண சேவைகளுக்கு கடும் போட்டியாக Realme PaySa களமிறக்கப்பட உள்ளது.
இந்த சேவை தற்போது சோதனை நிலையில் உள்ளதால், ஊரடங்கு முடிந்த பின்னர் இது வெளியிடப்படும் என்று கருதப்படுகின்றது.
இந்த சேவையினை இந்தியாவில் கொண்டுவரும் பொருட்டு ரியல்மி, ஓப்போ உடன் கைகோர்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.