Mobile

தட் புளூ நிறத்தில் அறிமுகமான ரியல்மி நார்சோ 10!!

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் தற்போது தட் புளூ என்ற நிறத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.  ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்டதாக உள்ளது, மேலும் மினி டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, பின்புறம் கைரேகை சென்சார் அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது.

தட் புளூ நிறத்தில் அறிமுகமான ரியல்மி நார்சோ 10!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை நார்சோ 10 மாடல் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்றவற்றினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

வந்தது Redmi Note 6 Pro இல் MIUI 11 அப்டேட்!

TechNews Tamil

மலிவு விலையில் வரவுள்ள Huawei Enjoy 10S!

TechNews Tamil

ஆகஸ்ட் 28 இல் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil