ரியல்மியின் Realme Narzo 10 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 26 ஆம் தேதி அறிமுகம் ஆகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த போன் Realme UI உடன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டு உள்ளது.
இது MediaTek Helio G80 செயலியினையும் மாலி ஜி 52 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல்கள் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இது கேமரா வாட்டர் டிராப் நாட்சில் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டு உள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.