Mobile

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது சி12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ஆனது  6.5 இன்ச் 1600×720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் அது பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை  13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்புறத்தில்  5 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும்  6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 2000 தள்ளுபடி பெற்றுள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மீ 5 இன் அசர வைக்கும் அம்சங்கள்!

TechNews Tamil