மலேசியாவில் ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது காணலாம்.
ரியல்மி 7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G95 பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 30W டார்ட் சார்ஜ், 15W USB சார்ஜ் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பிரைமரி கேமராவாக 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டாக வெளியாகி உள்ளது.