ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது வழக்கம் போல் முதலில் மியான்மரில் அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது.
- ரியல்மி 6 ஐ 64 ஜிபி சேமிப்பு 4 ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 12,999,
- ரியல்மி 6 ஐ 128 ஜிபி சேமிப்பு 6 ஜிபி ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 14,999
- ரியல்மி 6 ஐ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 15,999

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக்கின் கேமிங் சார்ந்த ஜி 90 டி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது 12nm இயங்குதளம் கொண்டு 2.05GHz கார்டெக்ஸ் A76 பெரிய கோர்கள் மற்றும் 6 2GHz கார்டெக்ஸ் A55 ஆற்றல் திறன் கொண்ட கோர்களைக் கொண்டுள்ளது.
மேலும் இது மாலி-ஜி 76 எம்சி 4 ஜிபியுடன் ஆக்டா-கோர் சிபியு வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கும் என்றும், ஃபுல்ஹெச்.டி கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகிறது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கொரில்லா கிளாஸ் 3 வசதி கொண்டிருக்கும்.
இது மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இது 5000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் கலர் ஓஎஸ் 7.0 மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மேலும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி 80 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை, பின்புறத்தில் க்வாட் கேமரா கொண்டிருக்கும் என்றும், இது 48 மெகாபிக்சல் சென்சார் கொண்டும் உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.