Mobile

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

1.    ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 16,999

2.    ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 17,999

3.    ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 18,999

இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இதன் விற்பனையினை மார்ச் 13 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டதாகவும் உள்ளது, மேலும் இது அட்ரினோ 618 GPU வசதி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும்  6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த  ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில்  64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்,  8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும்

2 எம்.பி. மேக்ரோ சென்சாரைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன்  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி  கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகத்திற்குத் தயாரான நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil