Mobile

ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro!

ரியல்மீ 5 தொடரின், ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகமாகவுள்ளது.

4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று மதியம் 12:30 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro!

இந்த ஸ்மார்ட்போனுடன் ரியல்மீ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான ஒரு பிரத்யேக பக்கம் ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்து பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஃப்ளிப்கார்ட் பக்கத்தில் இந்த ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு 119 டிகிரி விரிந்த புகைப்படங்களை எடுக்கக்கூடிய அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு 4cm மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ரியல்மீ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரி 25 ஆம் தேதி நோக்கியா கூறவுள்ள நற்செய்தி!!

TechNews Tamil

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட Realme X2 இன் அசரவைக்கும் அம்சங்கள்!!

TechNews Tamil

ஆரம்பமானது ரியல்மி 3i இன் விற்பனை!!

TechNews Tamil