Realme X2 சீனாவில் அறிமுகமாகி அதிக வரவேற்பினைப் பெற்றநிலையில். சிறப்பான விற்பனையை துவங்கியுள்ளது ரியல்மீ நிறுவனம். இதன் அசரவைக்கும் அம்சங்கள் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை கலர்ஓஎஸ் 6 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும்
இது
6.4 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவினையும், 1080×2340 பிக்சல்கள் என்ற
அளவிலான பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் கூடுதலாக கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
Realme X2 குவாட் ரியர் கேமராவினைக் கொண்டுள்ளது, இது 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ஜி.டபிள்யூ 1 சென்சார் ஆறு துண்டுகள் கொண்ட எஃப் / 1.8 லென்ஸைக் கொண்டுள்ளது.
8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 4 செ.மீ மேக்ரோ ஷாட்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் போன்றவையும் இதில் உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.
64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது. இது 4,000mAh பேட்டரி அளவு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது.