மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் டிசம்பர் 20 ஆம் தேதி ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் WQHD, flat OLED டிஸ்பிளே வடிவமைப்பு, 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டதாக இருக்கும்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாக இருக்கும்.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாக இருக்கும்.
இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்ஆதரவு கொண்டதாக இருக்கும்.