ரியல்மீ இந்தியா நிறுவனம் ‘ரியல்மே ஃப்ரீடம் சேல்’ குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 3 வரை நடைபெறவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் நடைபெறும் இந்த விற்பனையில் ரியல்மீ 3 Pro, ரியல்மீ 2 Pro மற்றும் ரியல்மீ C1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது.
இந்த விற்பனையில் முதலாவதாக ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடி பெற்று விற்பனையாகவுள்ளது. அதன்படி 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

அதேபோல, 6GB + 64GB மற்றும் 6GB + 128GB வகைகள் 14,999 ரூபாய் மற்றும் 15,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.
இதேபோல, மற்றொரு ஸ்மார்ட்போனான ரியல்மீ 2 Pro தன் விலையிலிருந்து 500 ரூபாய் சலுகையை பெற்றுள்ளது. அதன்படி 4GB RAM + 64GB சேமிப்பு ரியல்மீ 2 Pro ஸ்மார்ட்போன், 10,490 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
7,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ள ரியல்மீ C1 ஸ்மார்ட்போன், 500 ரூபாய் தள்ளுபடியை பெற்று 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
ரியல்மீ நிறுவனம், ‘டைமண்ட் ரெட்’ நிற வண்ணத்தில் ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.