மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் வியட்நாமில் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அமைப்பினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாகவும், மீடியாடெக் ஹீலியோ ஜி35 செயலி மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும். மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
இது 8 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி செல்பி கேமரா கொண்டதாகவும் உள்ளது.