Mobile

ஜூலை 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமாகிறது ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் உலக சந்தையில் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில் மலேசியாவில் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக்  கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரைகார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஜூலை 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமாகிறது ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன்!!

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதி கொண்டதாகவும், மேலும் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜபியு வசதி கொண்டதாகவும் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு  இயங்குவதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் 4300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் /பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil