Realme Xஸ்மார்ட்போனின் அதன் இந்திய விற்பனையை இன்று முதல் Flipkart தளம் மற்றும் நிறுவனத்தின் சொந்த வலைதளமான Realme.com வழியாக தொடங்குகிறது.
Oppo நிறுவனத்தின் துணை நிறுவனமான Realme பிராண்டின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனின் பிரதான சிறம்பம்சமாக அதன் கேமராக்களை கூறலாம். இது 48MP அளவிலான முதன்மை கேமராவை கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் 16MP அளவிலான Pop-up Selfie கேமராவையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் Realme
X-ன் 4 ஜிபி + 128 ஜிபி மாதிரியானது ரூ.16,999/-க்கும், Top-End Model ஆன 8 ஜிபி + 128 ஜிபி மாதிரியானது ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும்.
இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும் Realme
X-ஐ Axis
Bank Credit Card, HDFC Bank Debit Card மற்றும் Axis Bank Buzz Credit Card கொண்டு வாங்கினால் 5%
Cashback-க்கும்
மற்றும் அடுத்து வரும் Flipkart Fashion-ற்கான 10% தள்ளுபடியும் (ரூ.100.0 வரை) கிடைக்கும். மறுகையில் உள்ள Realme.com
தளத்தில் MobiKwik
மற்றும் Paytm
First membership வழியாக
நிகழ்த்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% சூப்பர்கேஷ் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களுக்காக, ரியல்மி எக்ஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது. அது 48MP Sony IMX586 ஆனது முதன்மை கேமராவும், 5MP அளவிலான இரண்டாம் நிலை கேமராவும் உள்ளது.