Realme X மற்றும் Realme 3i ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் இன்று முதல் அதன் விற்பனையை தொடங்குகின்றன. இந்த விற்பனையானது இன்று மதியம் 12 மணிக்கு (நண்பகல்) Flipkart மற்றும் Realme Online store-ல் நடைபெறும்.

நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி எக்ஸ், Snapdragon 710 SoC, ஒரு ஸ்னாப்டிராகன் 710 SoC, பாப்-அப் செல்பீ கேமரா, பின்புறத்தில் 48MP அளவிலான முதன்மை கேமரா மற்றும் 6.53 இன்ச் அளவிலான Full-HD+ டிஸ்பிளே போன்ற அம்சங்களை கொண்டிருக்க, மறுகையில் உள்ள ரியல்மி 3ஐ ஆனது 4,230mAh பேட்டரி, Helio P60 SoC, 6.2 இன்ச் அளவிலான HD+ டிஸ்பிளே, Waterdrop-style notch வடிவமைப்பு மற்றும் 13MP அளவிலான முதன்மை கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவில் ரியல்மி எக்ஸ்-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.16,999/-க்கும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.19,999/-க்கும் வாங்க கிடைக்கும்.
மறுகையில்
உள்ள ரியல்மி 3ஐ-ன் 3 ஜிபி ரேம்
+ 32 ஜிபி மாடலானது ரூ.7,999/-க்கும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி
மாடலானது ரூ.9,999/-க்கும் வாங்க கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் டயமண்ட் பிளாக், டயமண்ட் ப்ளூ மற்றும் டயமண்ட்
ரெட் போன்ற வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளன.