Gadgets

வெறும் ரூ.10,499/-க்கு கிடைக்கும் RCA ஸ்மார்ட் டிவி!

அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஆர்.சி.ஏ தனது சமீபத்திய ஸ்மார்ட் டிவி தொடரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ஆனது இரண்டு வெவ்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 


அதாவது முதல் தயாரிப்பு ஆனது 4K UHD resolution-ஐ கொண்டுள்ளது, இரண்டாவது தயாரிப்பு ஆனது FHD resolution-ஐ கொண்டுள்ளது.

அமேசானின் பட்டியலின்படி, FHD resolution கொண்ட RCA Smart LED டிவி ஆனது, மூன்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. முதலாவதாக, மிகவும் விலை குறைவான RCA Smart LED TV 32-inch “HD-Ready” வேரியண்ட். இது ரூ.10,499/-க்கு வாங்க கிடைக்கிறது.

வெறும் ரூ.10,499/-க்கு கிடைக்கும் RCA ஸ்மார்ட் டிவி!

FHD resolution மற்றும் 43-inch display கொண்ட இரண்டாவது வகையானது ரூ.18,999/-க்கும், 49-inch displayஉடனான FHD resolution கொண்ட மூன்றாவது வகையானது ரூ.23,999/-க்கும் வாங்க கிடைக்கிறது.

 
இந்த அனைத்து ஸ்மார்ட் டிவிக்களுமே, Detailed quality-ஐ வழங்கும் போது பிரதிபலிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான A+ grade display panel-களை கொண்டுள்ளன. 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட Cortex A53 CPUஉடனான Quad-core processor கொண்டு இயங்குகிறது மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் செயலாக்கத்திற்காக Penta-core GPU இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ஆனது, நெட்ஃபிக்ஸ், யூட்யூப், அமேசான் ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, சோனி லிவ், வூட் மற்றும் பல ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கும். 


4K UDH resolution கொண்ட ஆர்.சி.ஏ ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் ஆனது ரூ.28,999/- என்கிற விலை புள்ளியில் இருந்து தொடங்குகின்றன. 49 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்ட முதல் மாடல் ஆனது ரூ.28,999/-க்கும், 55 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்ட இரண்டாவது மாடல் ரூ.33,999/-க்கும் வாங்க கிடைக்கும்.

Related posts

இந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்!!

TechNews Tamil

ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!!

TechNews Tamil