Apps

சொமேட்டோ கேட்ட கேள்வி… ட்விட்டர் வாசிகளின் சிறப்பான பதில்கள்!!

ஆன்லைன் உணவு டெலிவிரி ஆப்களில் முன்னணியில் இருக்கும் சொமேட்டோ, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. 

தற்போது சொமேட்டோவுக்கு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லெபனான், துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் 12.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் டெலிவரி செய்யும் உரிமையினை அரசாங்கம் வழங்கி வந்தது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் அதிகமானால், இவைகளின் உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சொமேட்டோ கேட்ட கேள்வி… ட்விட்டர் வாசிகளின் சிறப்பான பதில்கள்!!

தற்போது சொமேட்டோ நிறுவனம் ட்விட்டரில் 2020 ஆம் ஆண்டின் உணவாக இருந்தால் அது என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு ட்விட்டரில் பலரும் வேற என்ன சீனர்களின் ஸ்பெஷல் உணவுகளான கரப்பான் பூச்சி வறுவல், பாம்பு பொரியல், நாய் குழம்பு, பூனை ஃப்ரை என்பதுபோல் பதில் கூறிவருகின்றனர்.

கொரோனா பரவத் துவங்கிய ஆரம்ப காலத்தில் இந்த கொரோனாவானது சீனாவில் உள்ள விலங்குகளை விற்பனை செய்யும் ஊகான் சந்தையில் இருந்தே பரவியதாக கூறப்பட்டது. இதுவே பலரால் நம்பப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூம் செயலி போனால் என்ன? இதோ வந்துடுச்சு கூகுளின் ஹேங்அவுட்ஸ் மீட்!

TechNews Tamil

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

TechNews Tamil

மதுபான விற்பனைக்கான BevQ செயலி.. ஒரேநாளில் 1 லட்சம் டவுண்ட்லோடு!!

TechNews Tamil