பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.
இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.
ஆனாலும் இளைஞர்களை இதன் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை, இந்த நிலையில் பப்ஜி கேம் ஆனது 0.18.0 அப்டேட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்டேட்டில் பல வியக்கத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது புதிய இடங்கள், புதிய சாலைகள் மற்றும் புதிய வளங்கள் போன்றவற்றுடன் மிராடோ என்ற புதிய காரும் அத்துடன் புதிய ரேஸ் டிராக் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அப்டேட்டில் ஒரு புதிய முடிவு திரை மற்றும் புதிய நாணயம் கொண்டுவருகிறது. சில்வர் வெகுமதிகளுக்கு பதிலாக ஏஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கிள் ஷாட், வெடிப்பு, புதிய பி 90 எஸ்எம்ஜி துப்பாக்கி போன்றவற்றுடன், ஏற்கனவே பப்ஜி விளையாட்டில் இருந்த குறைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.
இந்த அப்டேட்டை கூகுள் Play Store மூலம் டவுண்ட்லோடு செய்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.