Games

காரைக்காலில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பப்ஜி போட்டி!

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.

இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.

தற்போது ரூ.1.லட்சம் பரிசுத் தொகையுடன் இந்த பப்ஜி கேமை திருவிழாவில் ஒரு விளையாட்டாக அறிவித்து உள்ளனர்.

அதாவது காரைக்குடி அருகே கல்லலில் மாசி மாத தேர் திருவிழாவையொட்டி தனியார் மொபைல் கடை சார்பில் பப்ஜி கேம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பப்ஜி போட்டி!

இந்த போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது, முதல் பரிசாக 1 லட்சம், 2 ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3 வது பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 ஒரு குழுவில் 4 பேர் என ஒருபோட்டிக்கு 25 குழுக்கள் பங்கு பெறுவர். இந்தப் போட்டிக்கான முன்பதிவு ஆன்லைனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு குழுவுக்கு முன் பதிவுக் கட்டணமாக ரூ.300 விதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் இந்தப் போட்டியினை நடத்தக் கூடாது என்று போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.

Related posts

வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கான மொபைல்..!!

TechNews Tamil

கேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

TechNews Tamil