பப்ஜி ஆன்லைன் விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி சமீபத்தில் தடை செய்தது.
கொரோனாவால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் டிவி, இணையம், மொபைல் போன்றவையே இவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

இந்தநிலையில் பப்ஜி கேம் விளையாடுவோரின் எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நிலையில் இந்தியாவில் பப்ஜி கேம் தடைசெய்யப்படுவதாக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியாவில் சீன ஆப்கள் ஏற்கனவே 59 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீதமுள்ள சீன செயலிகளை விரைவில் முழுமையாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் குறித்த பட்டியலில் பப்ஜி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயமாக பப்ஜி மொபைல் கேம் செயலியும் இடம்பெற்று இருக்கிறது.
ஏற்கனவே பப்ஜி மொபைல் கேமுக்கான தற்காலிக இடைநிறுத்தம் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 5, 12 மணி வரை தொடர்ந்தது. இதுகுறித்து பலரும் சோகத்தில் இருக்க, அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இது உலகளாவிய சேவையக பணிநிறுத்தம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.