பப்ஜி ஆன்லைன் விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்தது.
கொரோனாவால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருந்தனர். அந்த நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோரின் எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்தது.
அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. பப்ஜி நீக்கப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என்றும் கூறி இருந்தனர்.

பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன்
கொண்டிருந்த தொழில்முறை உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்தது.
எற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் பப்ஜி செயலியானது அக்டோபர் 30 ஆம் தேதி முதல் இயங்காது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது பப்ஜி நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின்படி அனைத்து பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானதாக உள்ளதால் இந்தியா பயனர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது.