பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.
இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற ஒவ்வொரு நாடும் இதனைத் தடை செய்யத் துவங்கியது.

ஆனாலும் இளைஞர்களை இதன் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை, இந்தநிலையில் ஒவ்வொரு நாடுகளிலும் பப்ஜி தடைசெய்யப்பட்டு வந்தநிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உலகமெங்கும் பப்ஜி லைட் செயல்படாது என பப்ஜி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பப்ஜி லைட் கேம் விளையாடுவோர் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தருவார்கள் என்று நம்புகிறோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பப்ஜி லைட் கேம் ஆனது வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் செயல்படாது.
இதற்கு பயனர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். ஆனாலும் பப்ஜி லைட் பேஸ்புக் பயன்பாட்டில் இருக்கும்” என்று அறிவித்துள்ளது. இந்த செய்தியானது உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.