Games

2ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான ‘பப்ஜி லைட்’..!

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது அந்த கேமின் லைட் வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டுக்கு முன்னர்தான் பிலிப்பைன்ஸில் பப்ஜி லைட் கேம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய மொபைல் போன் பயனர்கள், பப்ஜி மொபைல் லைட் கேமை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பப்ஜி மொபைல் கேம் உருவாக்கப்பட்டதைப் போன்றே, லைட்டும், ‘அன்ரியல் இஞ்சின் 4′ கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பப்ஜி மொபைல் கேமில், 100 பேர் விளையாட முடியும். இந்த லைட் கேமில், 60 பேர் மட்டுமே விளையாட முடியும். 

2ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான ‘பப்ஜி லைட்’..!

பப்ஜி லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதே நேரத்தில்தான், பப்ஜி மொபைல் கேமிற்கு, வெர்ஷன் 0.12.0 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘ஆர்பிஜி-7′ ஆயுதம் மற்றும் ‘பக்கி’ வாகனம், அதுமட்டுமல்லாமல் புதிய இடமும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல கிளாசிக்கல் மோடில், 60 பேர் வரை விளையாட முடியும். முன்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக இருந்தது.
 

டென்சென்ட், பப்ஜி லைட் கேமை இன்ஸ்டால் செய்ய 400 எம்.பி இருந்தால் போதும் என்று சொன்னாலும், அதன் மொத்த சைஸ் 491 எம்.பி ஆகும். 

இந்த புதிய பப்ஜி லைட்டின் சிறப்பம்சங்களாக, குறிவைப்பதற்கு ஏதுவாக டிசைன், புதிய வின்னர் பாஸ், புல்லட் டிரெய்ல் அட்ஜெஸ்மென்ட், வெகு நேரம் நீட்டிக்கப்பட்ட தாக்கும் நேரம், நகரும் போதே குணப்படுத்திக் கொள்ளுதல், மேப் ஆப்டிமைசேஷன், லொகேஷன் டிஸ்ப்ளே ஆகியவை இருக்கின்றன. 

Related posts

ஒரு வருஷத்துக்குள்ள 25 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்த கால் ஆஃப் டியூட்டி கேம்!!

TechNews Tamil

சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அறிமுகமான புதிய கேமிங் போன்!

TechNews Tamil

தந்தையின் மருத்துவச் செலவுக்கான சேமிப்பு பணமான ரூ.17லட்சத்தை பப்ஜியில் செலவிட்ட இளைஞர்!!

TechNews Tamil