Games

பப்ஜி கேமிங்க் ஆப்: முதலாவது ஆண்டு கொண்டாட்டம்!!

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.

தற்போது பப்ஜி கேம் ஆனது 0.18.0 அப்டேட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்டேட்டில் பல வியக்கத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த மேம்பாடுகளானது முதலாமாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி கேமிங்க் ஆப்: முதலாவது ஆண்டு கொண்டாட்டம்!!

மேலும் பீட்டா வெர்ஷனில் உள்ள பயனர்கள் வியக்கும் வகையிலான அனைத்து அம்சங்களும் லைட் வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் லக்கி டிரா தீம் கலக்கலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வடமேற்கு பகுதியில் வரேங்க மேப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது புதிய இடங்கள், புதிய சாலைகள் மற்றும் புதிய வளங்கள் போன்றவற்றுடன் மிராடோ என்ற புதிய காரும் அத்துடன் புதிய ரேஸ் டிராக் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அப்டேட்டில் ஒரு புதிய முடிவு திரை மற்றும் புதிய நாணயம் கொண்டுவருகிறது. சில்வர் வெகுமதிகளுக்கு பதிலாக ஏஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கிள் ஷாட், வெடிப்பு, புதிய பி 90 எஸ்எம்ஜி துப்பாக்கி போன்றவற்றுடன், ஏற்கனவே பப்ஜி விளையாட்டில் இருந்த குறைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

Related posts

இந்திய விமானப்படை வெளியிடவுள்ள IAF மொபைல் கேம்!

TechNews Tamil

இந்தியாவில் புதிய வெர்ஷனுடன் மீண்டும் அறிமுகமாகவுள்ள பப்ஜி கேம்!!..

TechNews Tamil

ஃபோர்ட்நைட்: 22 கோடியே 66 லட்சம் ரூபாய் பரிசு வென்ற சிறுவன்!

TechNews Tamil