Games

இந்தியாவில் புதிய வெர்ஷனுடன் மீண்டும் அறிமுகமாகவுள்ள பப்ஜி கேம்!!..

சமீபத்தில் இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. பப்ஜி நீக்கப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என்றும் கூறி இருந்தனர்.

பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருந்த தொழில்முறை உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்தது.

இருப்பினும் பப்ஜி நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின்படி அனைத்து பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானதாக உள்ளதால் இந்தியா பயனர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 30 ஆம் தேதி முதல் இயங்காது என்ற முடிவினை எடுத்தது.

இந்தியாவில் புதிய வெர்ஷனுடன் மீண்டும் அறிமுகமாகவுள்ள பப்ஜி கேம்!!..

இந்தநிலையில் பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது, சீன நிறுவனம் டென்சென்ட்டுடனான உறவுகளை ரத்து செய்து இந்தியாவில் ஒரு நிறுவனத்தை அமைத்துத் தனித்துச் செயல்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியப் பயனர்களைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவுக்கு என்று பப்ஜியின் புதிய வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும் பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் அமைக்கப்படும் பப்ஜி அலுவலகத்தில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

Related posts

ஜாலி ஜாலி வந்துருச்சு.. அனைவரும் எதிர்பார்த்த புதிய கேமிங் போன்!

TechNews Tamil

பல எதிர்பார்த்த அப்டேட்டுகளுடன் பப்ஜி கேம்!!

TechNews Tamil

கொரோனாவால் பலியானவர்களுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பப்ஜி கேம்!!

TechNews Tamil