Mobile

ப்ரைம் டே: மொபைலுக்கு ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது அமேசான்

நாளை தொடங்கவுள்ள அமேசான் ப்ரைம் டே விற்பனையில், லேட்டஸ்ட் மொபைல்களுக்கு அதிக ஆஃபர்கள் வழங்கப்படவுள்ளன. இந்த ப்ரைம் டே விற்பனையில் அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். 

அதிக ஆஃபர்கள் நாளைதான் ஆரம்பாகும். இருப்பினும், டீல்கள் குறித்த சில விவரங்களை அமேசான் வெளியிடத் தொடங்கியுள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிக ஆஃபர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான மொபைல்களில் ஒன் ப்ளஸ் 7, சாம்சங்க கேலக்ஸி எம்40 உள்ளிட்ட போன்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் பட்ஜெட் ரேட்டில் விற்பனையாகும் சாம்சங் எம்40 ஆன்லைனை பொறுத்தளவில் அமேசானில் மட்டுமே கிடைக்கிறது. 

ப்ரைம் டே: மொபைலுக்கு ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது அமேசான்

6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்பீல்ட் மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் ரூ. 32,999-க்கு விற்பனையாகிறது. இதேபோன்று சாம்சங் எம் 20, ரியல் மீ யு1, நோக்கிய 6.1 ப்ளஸ் உள்ளிட்ட போன்களின் விலையும் அதிரடி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

அமேசான் ப்ரைம் டேயில் அதிரடி விலைக்குறைப்பு செய்யப்பட்ட போன்களின் பட்டியலை அமெசான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது: 

  • Samsung Galaxy M20: Rs. 9,990 ( Actual Price Rs. 11,290)
  • Realme U1: Rs. 8,990 (Actual Price Rs. 12,999)
  • Nokia 6.1 Plus: Rs. 11,999  (Actual Price Rs. 21,999)
  • Samsung Galaxy M10: Rs. 7,990 (Actual Price Rs. 8,190)
  • Xiaomi Redmi 6 Pro: Rs. 8,999 (Actual Price Rs. 11,499)
  • Nokia 5.1: Rs, 6,999 (Actual Price Rs. 15,999)
  • Samsung Galaxy A8 Star: Rs. 17,790 (Actual Price Rs. 38,000)
  • Xiaomi Redmi 6: Rs. 6,999 (Actual Price Rs. 7,999)
  • Vivo V15 Pro: Rs. 26,990 (Actual Price Rs. 32,990)

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil