Mobile

சாம்சங் கேலக்ஸி நோட் 10 & நோட் 10 பிளஸ் இன் விலை நிர்ணயம் !

மாபெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிய சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்கள் இன்று அதன் அதிகாரபூர்வ அறிமுகத்தை சந்தித்துள்ளன.


முதன்முறையாக இரண்டு தனித்துவமான வேரியண்ட்கள் மற்றும் முதன் முறையாக புதிய SoC பயன்பாடு என அசத்தும் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே அதன் முன் மற்றும் பின்புறத்தில் ஒரே மாதிரியான கேமரா அமைப்புகளையும், Near-full screen டிஸ்பிளேவையும் கொண்டுள்ளன.


வேரியண்ட்களைப் பொறுத்தவரை, Galaxy Note 10 ஆனது 4ஜி திறன் கொண்ட 8GB RAM மற்றும் 256GB மாடாலகாவும், 5ஜி திறன் கொண்ட 12GB RAM மற்றும் 256GB மாடலாகவும் வெளியாகியுள்ளது. மறுகையில் உள்ள Galaxy Note 10 Plus ஆனது நிலையான 12GB RAM உடனான 256GB மற்றும் 512GB மாடல்களின் கீழ் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 & நோட் 10 பிளஸ் இன் விலை நிர்ணயம் !

கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஆகிய இரண்டுமே ஒற்றை முன்பக்க கேமராவை கொண்டுள்ளன. அவைகள் மேற்புற டிஸ்பிளேவின் மையத்தில், மெல்லிய பெஸல்களின் உள்ளே உட்பொதிக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், கேலக்ஸி நோட் 10 ஆனது ஒரு ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Optical stabilisation மற்றும் f/1.5 – 2.4 என்கிற அளவிலான Variable aperture-ஐ கொண்ட 12MP Dual-phase detection ஆனது முதன்மை கேமராகவும், f/2.2 உடனான 16MP Ultra-wide angle லென்ஸ் ஆனது இரண்டாம் நிலை கேமராகவும் f/2.1 உடனான 12MP Telephoto லென்ஸ் ஆனது மூன்றாம் நிலை கேமராகவும் உள்ளது.

மறுகையில் உள்ள Galaxy Note 10 Plus-ல் கூடுதலாக ஒரு 0.3MP அளவிலான DepthVision கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த கேமரா Augmented reality அம்சங்களை ஒருங்கிணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கேலக்ஸி நோட் 10 அமெரிக்க விலை ஆண்டு 949 டாலர்கள் என்பதால் இந்தியாவில் இது ரூ.67,500/- என்கிற புள்ளியை சுற்றிய ஒரு விலையில் வெளியாகலாம். மறுகையில் உள்ள கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஆனது 1,099 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகமாகி உள்ளதால், இந்தியாவில் இது ரூ.78,000/- என்கிற புள்ளியில் இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related posts

லீக்கானது Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது ரெட்மி K30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil