Mobile

ரியல் மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான விலை நிர்ணயம்!!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை மார்ச் 5 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவினையும், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20x ஸூம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை விவரங்கள் அதிகாரப் பூர்வமாக வெளியாகி உள்ளது.

ரியல் மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான விலை நிர்ணயம்!!

1.      ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.13,999

2.      ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலின் விலை- ரூ.9,999

டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை  ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் போல் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும் என்றும், கேமராவைப் பொறுத்தவரை க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், ஒற்றை செல்பீ கேமராவினையும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பினையும், பின்புறத்தில் பாதுகாப்பு வசதிக்காக கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி 90 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

Related posts

5000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ கமோன் 15 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

399 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!

TechNews Tamil