அலைக்கற்றைக்கு ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய நிலுவைத் தொகையாக ரூ. 41 ஆயிரம் கோடி மற்றும் 1.33 லட்சம் கோடி செலுத்தப்பட வேண்டி உள்ளது.
அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களும், நிலுவைத் தொகையை, மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏர்டெல் நிறுவனம் நிலுவைத் தொகையில் 1000 கோடியினை செலுத்தி உள்ள நிலையில் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் நிலுவைத் தொகையினை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஐடியா நிறுவனத்தினை ஏர்செல் நிறுவனத்தைப் போல் மூடி விடுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தநிலையில், அது உண்மையில்லை வதந்தி என்று ஐடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் ஐடியா தனது பிளான் விலையினை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் விவரங்களாவது,
1. 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் -ரூ 35
2. குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம்- ரூ 50
3. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலை- நிமிடத்திற்கு 6 பைசா
இந்த விலை அதிகரிப்பானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.