வாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சிறப்பான பயன்களைக் கொண்ட புதிய அப்டேட்டுக்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.
தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில் வீடியோ ஸ்டேட்டஸ் காலக்கெடுவை WhatsApp மீண்டும் திருத்தியுள்ளது.

அதாவது 30 வினாடிகள் வரையிலான வீடியோ ஸ்டேட்டஸ்களை மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப் நிறுவனம் 15 வினாடிகளாக குறைத்தது. அதாவது லாக்டவுன் காரணமாக வாட்ஸ்அப்பின் சேவையகங்களில் சுமையை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வீடியோ ஸ்டேட்டஸ் 30 விநாடிகள் வரை பதிவேற்றுவதற்காக இருந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166 பதிப்பு தற்போது பிளே ஸ்டோரில் இல்லை.
அதாவது சமீபத்தைய பீட்டா அப்டேட்டை பதிவிறக்கும் போது 30 வினாடிகள் மட்டுமே வீடியோவைப் பதிவேற்ற முடியும் என்றும் WABetaInfo கூறியது. மேலும் பயனர்கள் APKMirror மூலம் இந்த அப்டேட்டைப் பெற முடியும்.
சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.20.166 இன்ஸ்டால் செய்து, மீண்டும் 30 விநாடிகள் வரை பதிவேற்ற முடியும்.