உலகினை ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனா வைரஸ், இதுவரை 12,00,000 ஐ நெருங்கும் அளவு நபர்களைப் பாதித்துள்ளது, மேலும் இந்த வைரசால் இதுவரை 60,000 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 3082 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சிகிச்சை பலனின்றி 86 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மேலும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையானது அதிகமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் இந்திய அரசாங்கத்தால் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போதைய சூழலில் இந்தியாவில் கையிருப்பில் உள்ள வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், வெண்டிலேட்டரினை கூடுதலாக வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் ஐ.ஐ.டி ஹைதராபாத் மலிவு விலையில், வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது. இது IoT மூலம் இயக்கப்பட்டுள்ளதால் தொலைப்பேசி பயன்பாட்டின் மூலம் இயக்க முடியும்.
- ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஜீவன் வெண்டிலேட்டர்- ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்)
சிறப்பு அம்சமாக மின்சாரம் இல்லாமல் கூட இந்த ஜீவன் லைட் வெண்டிலேட்டர் செயல்படக்கூடியதாக உள்ளது.
இது மற்ற வெண்டிலேட்டரைவிட, மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் வயதானவர்கள், இதய நோய்கள், நுரையீரல் ரீதியான நோய்கள், நீரிழிவு நோயாளிகள் போன்றோருக்கு வென்டிலேட்டர் வழங்கப்படாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.
இது, மின்சாரம் இல்லாமல் ஐந்து மணி நேரம் தடையின்றி செயல்படக் கூடியதாக உள்ளது.