ட்ராய் எனப்படும் தொலை தொடர்பு சேவை அமைப்பானது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி என்ற சேவையினை துரிதப்படுத்தும் வகையிலான திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.
அதாவது ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றொரு நெட்வொர்க்குக்கு மாற நினைத்தால், உடனே மாற முடியாது. இதற்காக பல வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த செயல்முறையினை எளிதாக்க நினைத்த டிராய் அமைப்பு எம்.என்.பி சார்ந்த விதிகளை மாற்றியுள்ளது, அதாவது இந்த புதிய விதிகள் பல சிரமங்களை குறைக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

செல்போன் எண்ணை போர்ட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இனி 2 முதல் 3 நாட்களுக்குள் போர்ட் செய்ய முடியும் என்று எம்.என்.பி சேவை கூறியுள்ளது.
போர்ட் செய்ய விரும்பினால் PORT>ஸ்பேஸ்>10 இலக்கு மொபைல் எண்> போன்றவற்றினை 1900 என்று எண்ணிற்கு மெசேஜ் செய்து போர்டபிலிட்டி செய்யவும். இதற்கான கட்டணம் ரூ.6.96 மட்டுமே ஆகும்.