மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் நாளை மறுநாள் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஐபிஎஸ் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வசதி கொண்டு இருக்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இருக்கலாம்.

கேமரா எனக் கொண்டால் 48எம்பி பிரைமரி சென்சார், 8 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.
மெமரி அளவாக 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.
புளூடூத் 5, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.