Mobile

புதிய வசதிகளுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு மேம்பட்ட சில வசதிகள் மற்றும் மென்பொருள் அப்டேட்டை பெற்றுள்ள்து.

மேம்பட்ட இந்த வசதியானது ஃபார்ம்வேர் 11.0.4.0.QGHINXM உருவாக்க எண்ணுடன் வருகிறது மேலும் இது பட செயலாக்கத்திற்கு தேர்வுமுறை வழங்குவதாய் உள்ளது.

  1. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.15,999
  2. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.16,999
  3. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.19,999
புதிய வசதிகளுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்” தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக உள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது அட்ரினோ 618ஜிபியு வசதி கொண்டு உள்ளது.

 மேலும் இது ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் போன்ற நான்கு கேமராக்களைக் கொண்டு உள்ளது.

மேலும் முன்புறத்தில் 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது, வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் ப்ளிப்கார்ட் மொபைல் பொனான்சா சேல்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil