Mobile

ரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

ஜிஎஸ்டி உயர்வு காரணமாக போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


1.   6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை- ரூ.15,999 (பழைய விலை)- ரூ.16,999 (புதிய விலை)

2.   6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை- ரூ.16,999 (பழைய விலை)- ரூ.17,999 (புதிய விலை)

3.  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை- ரூ.19,999 (பழைய விலை)- ரூ.20,999 (புதிய விலை)

இந்த போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

ரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 618ஜிபியு வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல், இரண்டாம் தலைமுறை கேம் டர்போ மோட் வசதி கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த போக்கோ எக்ஸ்2  ஸ்மார்ட்போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

TechNews Tamil

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி இசட்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள ரூ. 2,00,000 மதிப்பிலான சியோமி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil