Mobile

ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் தற்போது அதன் மூன்றாவது  ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையினைத் துவக்கி உள்ளது.

இந்த ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும், EMI பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு வெறும் ரூ.1,334 என்ற விலையிலும் விற்பனை ஆகிறது.

1.   6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.15,999

2.   6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.16,999

3.   8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை – ரூ.19,999

ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்” தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக உள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது அட்ரினோ 618ஜிபியு வசதி கொண்டு உள்ளது.

 மேலும் இது ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் போன்ற நான்கு கேமராக்களைக் கொண்டு உள்ளது.

மேலும் முன்புறத்தில் 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது, வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா 8.1 மீது அசத்தலான விலைக்குறைப்பு!

TechNews Tamil

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது அசத்தலான அம்சங்களுடன் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil