Mobile

சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் எம்3 ஸ்மார்ட்போனை நாளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போக்கோ எம்3  ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 610 GPU, 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெப்த் / மேக்ரோ கேமரா மற்றும்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை

 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ மற்றும்  ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாகவும், மேலும் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. 

Related posts

விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள விவோ எக்ஸ்50இ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil