Mobile

போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்!

சீனாவில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.  இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு, 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்!!

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11 போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினையும், மேலும் 8 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், ஐஆர் சென்சார் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil