போக்கோ நிறுவனத்தின் போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது உலக அளவில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவரங்கள் இதோ:
போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2400×1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் மெமரி அளவாக அட்ரினோ 650 GPU, 6 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி மற்றும் 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி அளவினைக் கொண்டதாகவும் உள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.
கேமரா என்னும்போது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 கொண்டதாக உள்ளது.
பேட்டரி என்னும்போது 4520 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.