Mobile

ஐரோப்பாவில் வெளியாகியுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் ஐரோப்பாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080×2340 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் வெளியாகியுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமானது ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ரெட்மி கே30 ஸ்பீட் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil