Mobile

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரான் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை  கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது.

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 610 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா,

2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா மற்றும்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியினையும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

‘ஐபோன் 11’ இன் அறிமுக தேதி அறிவிப்பு!!

TechNews Tamil

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

TechNews Tamil