கொரோனா வைரஸ் ஆனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவானது, 2019 ஆம் ஆண்டு கடைசியில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளையும் போதும் போதும் என்னும் அளவு அச்சுறுத்தி உள்ளது.
மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையினை இழந்து ஏறக்குறைய 8 மாதங்கள் ஆகிவிட்டது, அன்றாட பிழைப்பினை இழந்து பலரும் வறுமையில் வாடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பொதுமக்களின் ரேசன் கார்டுகளுக்கு பணம் வழங்குதல், அரிசி வழங்குதல் என இருந்து வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது நடைபாதை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதாவது ரூ.10,000 கடன் உதவி பெற இந்திய அரசு மொபைல் ஆப் -pm svanidhi app என்ற ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10000 கடன் உதவியை வழங்குகிறது. மேலும் இந்த கடனை மாதத் தவணை முறையில் நாம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் ஒராண்டுக்குள் திரும்பி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இந்தக் கடனைப் பெற விரும்புவோர், pm svanidhi app மூலம் அப்ளை செய்தல் வேண்டும். இந்த செயலியில் இதுவரை 5.68லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.