சாம்சங் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலை பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது.
தற்போது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹின்ஜ் அமைப்பைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.06 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 300×116 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஸ்கிரீன் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. சிறிய டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் மோட் வசதி கொண்டிருக்கும்.

இது சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும். பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதி கொண்டிருக்கும்.
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும். மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.