வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களை கவரும் விதமாக மெசேஜ்களை அனுப்புவதில் புதிய அப்டேட்டுக்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எளிமையான போட்டோ எடிட் ஆப்ஷனை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதற்கு வாட்ஸ்அப் முயற்சி செய்து வருகிறது.
இந்த தகவல்களை WABetaInfo என்ற வாட்ஸ்அப் அப்டேட்டை கண்காணித்து வரும் இணையதளம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப்பில்
ஒருவருக்கு போட்டோ அனுப்பும் போது, மேற்புறத்தில் மூன்று புள்ளிகள்
கொண்ட ஆப்ஷன் காட்டப்படும். அந்த ஆப்ஷனை க்ளிக் செய்து, போட்டோவை
எடிட் செய்து கொள்ளலாம்.

கலர் மாற்றுதல், பெயிண்ட், எழுத்துக்கள்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதில் கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி
சோதனை அளவில் உள்ளது. விரைவில் இது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்
ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட உள்ளது.
வாட்ஸ் அப்பில் வரவுள்ள போட்டோ எடிட்டிங்க் வசதி, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வாட்ஸ் அப்பில் மியூட் செய்தாலும் ஸ்டேடஸ் பார்க்கும் வசதியை கொண்டு வந்தது, குறிப்பிடத்தக்கது.