கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏறக்குறைய 5 மாதங்களாக ஊரடங்கானது அமலில் இருந்தது, அதேபோல் கொரோனாத் தொற்று காரணமாக உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு பல மாதங்களாக அமலில் இருந்தது.
இதனால் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே Work From Home முறையில் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நபர்கள் தற்போது ஊரடங்கு முடிந்த பின்னர் அலுவலத்திற்குச் சென்று வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நினைத்திருந்த நிலையில் பல நிறுவனங்களும் Work From Home முறையினை நீட்டித்துள்ளது.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அலுவலகத்தை திறக்கலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனா மீண்டும் தலைதூக்கும் நிலையில் அலுவலகங்களுக்கு திரும்புவது சரியான முடிவாக இருக்காது என்றும் அறிவித்துள்ளது.
அதாவது கொரோனா தாக்கம் மீண்டும் அமெரிக்காவில் அதிக அளவில் இருப்பதால் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பாமல் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பினை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.