Mobile

ஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு

இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒப்போ நிறுவனத்தின் Oppo F11 மற்றும் Oppo F11 Pro ஸ்மார்ட்போன்கள் மீது நிரந்தரமான விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


விலைக்குறைப்பை பொறுத்தவரை, OPPO F11 ஸ்மார்ட்போனின் 4GB RAM + 128GB அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ஆனது ரூ.17,990/-க்கு பதிலாக ரூ.16,990/-க்கும், இதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.19,990/-க்கு பதிலாக ரூ.17,990/-க்கும் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள OPPO F11 Pro ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB மாடல் ஆனது ரூ.23,990/-க்கு பதிலாக ரூ.21,990/-க்கு வாங்க கிடைக்கிறது. 


இதன் பிரதான அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ F11 ஆனது, Waterdrop notch வடிவமைப்பு கொண்ட 6.5 இன்ச் அளவிலான Full HD+ (2340 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Octa-core MediaTek Helio P70 12nm ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது.

ஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு

VOOC flash charge 3.0 ஆதரவு கொண்ட ஒரு 4020mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. Android 9 Pie அடிப்படையிலான ColorOS 6.0கொண்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது. 


இதன் பிரதான அம்சங்களை பொறுத்தவரை, 2340 x 1080 பிக்சல்கள் அளவிலான ரெசல்யூஷன், 90% Screen-to-body விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்ட 6.5 இன்ச் அளவிலான Full HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Mali-G72 MP3 GPU உடனாக Octa-core MediaTek Helio P70 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 


பின்புறத்தில் 48MP + 5MP அளவிலான இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16MP அளவிலான பாப்-அப் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. Android 9 Pie அடிப்படையிலான ColorOS 6.0 மூலம் இயக்கப்படுகிறது.

VOOC 3.0 fast charging ஆதரவு கொண்ட 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. Fingerprint sensor மற்றும் Face unlock ஆதரவு உடன் 4G VoLTE, ப்ளூடூத், வைஃபை, GPS, GLONASS, micro USB மற்றும் இரட்டை சிம் போன்ற ஆதரவுகளையும் வழங்குகிறது. 

Related posts

ஐரோப்பாவில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

சீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2!

TechNews Tamil